செய்திகள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள்… திடீரென வந்த லாரி… தஞ்சாவூர் அருகே பரபரப்பு…!! Revathy Anish17 July 20240148 views திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பிராத்தனை செய்வது வழக்கம். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள தஞ்சாவூர் வளம்பக்குடி அருகே சென்றனர். அப்போது சாலையில் வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள், லட்சுமி ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த சங்கீதாவை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.