செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள் தவறி விழுந்ததா…? வீசப்பட்டதா…? சாலையில் விழுந்த 500 ரூபாய் நோட்டுகள்… போட்டிபோட்டு அள்ளிய மக்கள்…!! Revathy Anish8 July 2024080 views மதுரை மாமரத்துப்பட்டி விலக்கு சாலையில் தேனி சாலையில் இருந்து வந்த அடையாளம் தெரியாத காரில் இருந்து திடீரென 500 ரூபாய் நோட்டுகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு சிதறி கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு அள்ளிச்சென்றனர். இதனை அறிந்த போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது வரை இதுகுறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். எனவே பணம் வேண்டுமென்றே தூக்கி வீசப்பட்டதா? அல்லது தவறி விழுந்ததா? என்றும், பொதுமக்கள் எடுத்து சென்ற பணத்தை மீட்க முடியுமா என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி சாலையில் சற்று பரபரப்பு நிலவியது.