செய்திகள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் தலையில் பானையுடன் வந்த விவசாயிகள்… ஆட்சியரிடம் கோரிக்கை… அலுவலகத்தில் பரபரப்பு…!! Revathy Anish29 June 20240102 views தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பலர் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய பானைகளை தலையில் வைத்துக்கொண்டு ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர். அவர்கள் அந்த மனுவில் 2023-24ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்தும் சேதத்தால் ஏற்பட்ட பயிர்களுக்கு காப்பீடு பணம் வழங்கவில்லை. ஆகையால் ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அங்கு வந்த விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் விவசாய கடன்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வெள்ளத்தால் பாதிப்படைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மேகதாது அணை காவிரியின் நடுவே கட்டுவதை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டு கொண்டே வெளியே சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.