இப்படி ஆகும்னு நினைக்கவில்லை… முக்கிய குற்றவாளிகள் வாக்குமூலம்… சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாதேஷ், கன்னுகுட்டி என்ற கோவிந்தராஜ் என 11 பேரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதேஷிடம் நடத்திய விசாரணையில் கடந்த 4 மாதங்களாக சென்னை கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்களான பன்சிலால், கவுதமிடம் மொத்தம் 9 பேரல் மெத்தனால் வாங்கியுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் 11,000 ரூபாய் என வாங்கிய 1 பேரலை 40,000 என விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார். மேலும் பல மாவட்டங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், முதல் விற்பனை செய்த கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு நேர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

இதனையடுத்து கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததாகவும், போதையை அதிகரிக்க மெத்தனால் வாங்கி கலந்ததில் பலரும் உயிரிழந்து, கண் பார்வை இழந்து இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!