கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறு… தொழிலாளிக்கு கத்திக்குத்து… மனைவி உள்பட 2 பேர் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மாறாங்கோணம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மெர்லின் சீத்தா(30) குமாரபுரத்தை சேர்ந்த கொத்தனார் ரீகன் ஜோய்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ராஜேந்திரனை பிரிந்து ரீகன் ஜோய்யுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று ராஜேந்திரன் மணக்காவிளைக்கு சென்ற போது அங்கு ரீகன் ஜோய் மற்றும் மெர்லின் சீத்தா அங்கு ஜோடியுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து ஆத்திரமடைந்த ராஜேந்திரன் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டீர்கள் என கூறி அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ரீகன் ஜோய் அவர் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரனை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் ரீகன் ஜோய் மற்றும் மெர்லின் அங்கிருந்த தப்பியோடினர். இதனையடுத்து படுகாயமடைந்த ராஜேந்திரனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மெர்லின் சீத்தாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரீகன் ஜோய்யை குழித்துறை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!