தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைந்துள்ளது. இந்த குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி அமைச்சர்கள் ஏ.வா. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த குழுவின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை கூடியுள்ளது. அப்போது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற தி.மு.க மேற்கொள்ள வேண்டிய அமைப்பு ரீதியான சீரமைப்புகள், மாறுதல் போன்றவற்றை ஆலோசித்தனர். மேலும் கட்சி நிர்வாகிகளிடமிருந்து வரும் புகார்களை விசாரிக்கவும் இந்தக் குழுவிற்கு அதிகாரம் உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.