அகத்தியர் வேடம் அணிந்த தி.மு.க தொண்டர்… விக்கிரவண்டியில் நூதன பிரச்சாரம்… ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்…!!

தேர்தல் அறிவித்தாலே அரசியல் கட்சிகள் பலரும் மக்களை ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்வது வழக்கமாகி விட்டது. தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக தொண்டர்கள் வாக்கு சேகரித்து வரும் நிலையில் தி.மு.க வை சேர்ந்த சேலம் கோவிந்தன் என்பவர் அகத்தியர் வேடம் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் விக்கிரவாண்டியில் வீதி வீதியாக சென்று தி.மு.கவிற்கு வாக்களித்தால் நல்லாட்சி கிடைக்கும், அகத்தியர் வாக்கு பலிக்கும் என கூறினார். இத்தகைய நூதன பிரச்சாரத்தால் அப்பகுதியினர் அவரை ஆர்வத்துடன் பார்த்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!