சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை… 5 இருசக்கர வாகனம் பறிமுதல்…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சிறுவர்கள் சிலர் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்த்த அதிகாரிகள் அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையாது உறுதியானது. இந்நிலையில் 5 சிறுவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வண்டியின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அங்கு வரவழைக்கப்பட்டு குழந்தைகளிடம் இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதி அளிக்க கூடாது எனவும், இதனால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்ற உத்தரவின் படி அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!