Home மாவட்ட செய்திகள்தெற்கு மாவட்டம்இராமநாதபுரம் அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்… சூறாவளி காற்று… படகு சவாரி ரத்து…!!

அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்… சூறாவளி காற்று… படகு சவாரி ரத்து…!!

by Revathy Anish
0 comment

மேற்கு திசையின் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ராமேஸ்வரம் கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் , மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும், 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து மாணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருவதால் மன்னர் வளைகுடா, குருசடை தீவு போன் உள்ளிட்ட தீர்வுகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை படகு போக்குவரத்து மற்றும் மீன் பிடிக்க தடை விதித்துள்ளனர். இதனால் படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.