செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் மது அருந்த ஆதார் வேண்டுமா…? வர இருக்கும் புதிய நிபந்தனைகள்… சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு…!! Revathy Anish29 June 2024089 views மதுக்கடைகளுக்கு மது அருந்த வரும் சிலர் ஊழியர்களுக்கு தெரியாமல் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி அதை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். அப்படி அவர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால் மதுக்கடை ஊழியர்களை கைகாட்டி விடுவது வழக்கமாக தொடர்ந்து வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே இதனை தடுக்கும் வகையில் மதுக்கடைக்கு வருபவர்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட மது பாட்டில்கள் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும், மதுக்கூடத்தில் அமர்ந்து குடிப்பவர்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணத்தை பெற்றுக்கொண்டு ஊழியர்கள் மது விற்பனை செய்வதற்குரிய திட்டத்தை விரையில் வெளியிடப்போவதாக தமிழக டாஸ்மார்க் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கூறியுள்ளார்.