செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் தாம்பரத்தில் மின்சார ரயில்கள் ரத்து… கூடுதல் பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!! Revathy Anish23 July 2024088 views தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மேம்பாட்டு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தாம்பரத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையிலும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு செல்லும் ரயிகள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. எனவே மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் இயக்கம் குறித்து பேருந்து நிலைய அலுவலர்கள்கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.