செய்திகள் மாநில செய்திகள் மின் கட்டணம் அதிரடி உயர்வு… ஜூலை 1-ல் இருந்து கணக்கில் எடுக்கப்படும்… மின்சாரத்துறை அறிவிப்பு…!! Revathy Anish16 July 20240232 views தமிழகத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இந்நிலையில் 400 யூனிட் மின்சாரத்திற்கு 4.60 பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது 4.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 401-500 யூனிட்க்கு 6.15 ரூபாயில் இருந்து 6.45 ரூபாயாகவும், 501-600 யூனிட்க்கு 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 601-800 யூனிட் வரை 9.20 ரூபாயில் இருந்து 9.65 ரூபாயாகவும், 800-1000 யூனிட் வரை 10.20 ரூபாயில் இருந்து 10.75 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 1000 யூனிட்டுக்கு மேல் 11.80 ரூபாயாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த மின் உயர்வு கட்டணம் ஜூலை 1 முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.