ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் கரும்புத்தோட்டத்தில் யானைகள் முகாம்… 2 ஏக்கர் பயிர் சேதம்… நஷ்டஈடு கேட்டு விவசாயி கோரிக்கை…!!! Revathy Anish9 July 20240102 views ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ராமாபுரம் பகுதியில் வசித்து வரும் மல்லு என்பவர் அவரது தோட்டத்தில் 3 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தார். நேற்று அவர் வழக்கம்போல தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது கரும்பு பயிர்ககளுக்கு நடுவே 4 காட்டுயானைகள் நின்று கொண்டிருந்தது. அந்த யானைகள் ஏராளமான கரும்பு பயிர்களை தின்று சேதப்படுத்தி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லு உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாளவாடி வனச்சரக அதிகாரி சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறையினர் கம்பு தோட்டத்தில் இருந்த யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த யானைகள் தோட்டத்தில் இருந்து போகாமல் அங்கேயே முகாமிட்டது. இதனையடுத்து வனத்துறையினர் டிரோன் மூலம் யானைகளை தீவிரமாக கண்காணித்தனர். அதன்படி சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த யானைகளை கர்நாடக வனப்பகுதியில் விரட்டினர். ஆனாலும் அந்த யானைகள் சுமார் 2 ஏக்கர் கரும்பு பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் வனத்துறை அதிகாரிகளிடம் நஷ்டஈடு வழங்கக்கோரி மல்லு வேண்டுகோள் விடுத்துள்ளார். யானைகள் தொடர்ந்து முகாமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.