செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் பறிபோன ஊழியர் உயிர்… பிடிபட்ட 47 மாடுகள்… ஆணையரின் உத்தரவு…!! Revathy Anish24 June 2024084 views திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வேலாயுதராஜ் வண்ணாரப்பேட்டை முக்கிய சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை நடுவே சண்டை போட்டு கொண்டிருந்த 2 மாடுகள் அவர் மீது திடீரென மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிரே வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த மாநகராட்சி ஆணையர் சாலையில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மாடுகள் சுற்றி திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் நெல்லை மாநகர பகுதிகளில் சுற்றி திரிந்த 47 மாடுகளை பிடித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு 13,000 வரை அபராதம் விதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.