வெளிநாடு தமிழர்கள் மூலம் அரசு பள்ளியில் ஆங்கில கல்வி… தொடக்கப்பள்ளியில் புது முயற்சி…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு கந்தம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த அப்பள்ளியில் அப்பகுதியில் சேர்ந்த வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களின் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் ஆன்லைன் ஆங்கில வகுப்புகள் அமைத்து மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களுடைய பணிநேரம் போக மீதமுள்ள நேரத்தில் மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைன் மூலம் ஆங்கிலம் கற்று கொடுத்து வருகின்றனர். தற்போது பள்ளியில் 65 மாணவர்கள் ஆங்கிலம் பயின்று சரளமாக ஆங்கிலத்தில் பேசி வருகின்றனர். இதனையடுத்து மாணவர்களின் ஒழுக்கத்திறனை மேம்படுத்த பள்ளியில் சிறிய அளவிலான தோட்டம் அமைத்து அதை மாணவர்களே பராமரித்து வளர்த்து வருகின்றனர். அதில் விளையும் காய்கறிகளை சத்துணவு திட்டத்தில் பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!