பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா மாகாணம் தமடோல பகுதியில் இடைத் தேர்தல் பிரசாரத்திற்க்காக முன்னாள் செனட் உறுப்பினர் இதயத்துல்லா கான் சென்றிருந்தார். அப்போது அவரை காரை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த பயங்கர தாக்குதலில் இதயத்துல்லா கான் மற்றும் அவருடன் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கைபர் பக்துன்குவா மாகாணத்தின் முதல்-மந்திரி அலி அமின் கந்தப்பூர் ஆணையிட்டுள்ளார். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உயிரிழந்தவர்களுக்கு இரங்களும் தெரிவித்தார். மேலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஒருவரும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.