ஏ.டி.எம்-ல்அதிகமாக வந்த பணம்… மாணவர்கள் செய்த செயல்… பாராட்டிய போலீசார்…!!

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காந்திநகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களான முகிலன், கௌஷிக் ஆகியோர் பணம் எடுக்க சென்றனர். அப்போது அவர்கள் எடுக்க வேண்டிய பணத்தைவிட 10,000 ரூபாய் அதிகமாக வந்துள்ளது. இதனை அறிந்த மாணவர்கள் அலங்கியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவர்கள் பணம் எடுக்க செல்வதற்கு முன்பு அலங்கியம் பகுதி சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் அவர் கார்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதனை அறிந்த போலீசார் ஹரிபிரசாத்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்து மாணவர்களின் முன்னிலையில் 10,000 ரூபாயை அவரிடம் ஒப்படைத்தனர். மேலும் பணத்தை முறையாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்களுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!