கனிமவளங்கள் எடுப்பதை தடுக்க வேண்டும்… அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கூட்டம்…!!

சென்னை தலைமையகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்த கூட்டம் நடைபெற்றது. அப்போது சுரங்கம் மற்றும் குவாரி நடத்துவர்களிடம் இருக்கும் நிலுவைத் தொகைகளை வசூல் செய்யவும், கனிமவளத்துறையின் வருவாயை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் செங்கல் சூளைகள், எம் சாண்ட், கிராஷர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்து செல்வதை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் இயற்கை வளங்கள் கூடுதல் துறை தலைமைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி, கனிமவளத்துறை ஆணையர் சரவணவேல் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!