தூக்கில் தொங்கிய குடும்பத்தினர்… 3 குழைந்தைகள் உள்பட 5 பேர் பலி… மத்திய பிரதேசத்தில் சோகம்…!!

மத்திய பிரதேசம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ரவ்டி பகுதியில் ராஜேஷ் தோத்வா(27) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு லலிதா தோத்வா(25) என்ற மனைவியும், பிரகாஷ்(7), அக்ஷய்(5), லக்ஷ்மி(9) என 3 பிள்ளைகளும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் 5 பேரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதனையடுத்து கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அலிராஜ்பூர் துணை பிரிவு போலீசார் தலைமையில் குழு அமைத்து ராஜேஷ் தோத்வா குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!