விவசாயிகள் கொலை வழக்கு… சிக்கிய 2 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒட்டன்குட்டை பகுதியில் வசித்து வந்த விவசாயி முத்துசாமி அவரது மனைவி சாமியாத்தாள் இருவரும் கடந்த ஆண்டு வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து 15 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதேபோல் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னிமலை அருகே உள்ள ஒப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி துரைசாமி கவுண்டர் என்பவரும் கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த 2 கொலையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியை சேர்ந்த கண்ணன்(25), மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பொதிகை நகரை சேர்ந்த இளையராஜன்(28) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 6 1/2 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது இவர்களை சென்னிமலை அழைத்து வந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!