உலக செய்திகள் செய்திகள் வீடியோ கேமில் மூழ்கிய தந்தை…. 2 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்….!! Revathy Anish20 July 2024076 views அமெரிக்காவின் அரிசொனா பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் தனது 2 வயது குழந்தையை காரில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் குழந்தை காரிலேயே உறங்கி விட்டது. இதனால் குழந்தையை எழுப்ப மனமில்லாமல் ஏ.சியை போட்டு வைத்துவிட்டு மகளை காரிலேயே விட்டுவிட்டு வீட்டுக்குள் சென்று வீடியோ கேம் விளையாட தொடங்கி விட்டார். சுமார் மூன்று நேரம் கழித்து கிறிஸ்தோபரின் மனைவி வீட்டிற்கு வந்த நிலையில் மகளை காணாமல் தேடி உள்ளார். அப்போதுதான் குழந்தை காரில் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. காரின் ஏ.சி அரை மணி நேரத்தில் தானாகவே ஆப் ஆகிவிடும் என்று தெரிந்திருந்தும் குழந்தையைப் பற்றி யோசிக்காமல் அஜாக்கிரதியாக வீடியோ கேம் விளையாடிய கிறிஸ்டோபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.