செய்திகள் தேசிய செய்திகள் “காதல் பிரச்சனை” மகள் கொடூர கொலை…. தந்தை வெறி செயல்….!! Inza Dev18 June 2024082 views டெல்லி காஞ்வாலா பகுதியில் காதல் பிரச்சினையில் தந்தை ஒருவர் தனது மகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். தந்தை தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்த நிலையில் அந்த பெண்ணோ தான் காதலித்தவனை தான் திருமணம் செய்வேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த தந்தை தனது பெண்ணை நேற்று முன்தினம் கால் டாக்ஸி ஒன்றில் காஞ்வாலா பகுதிக்கு அழைத்து சென்று கண்ணாடி அறுக்கும் ஆயுதத்தால் தனது மகளை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் டாக்ஸி டிரைவர் தான் தனது மகளை கொன்றதாக நாடகமாடியுள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மை தெரிய வர பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் தந்தையர் தினத்தை பிள்ளைகள் கொண்டாடி வந்த நிலையில் ஒரு தந்தை தனது மகளுக்கு ஆற்றிய கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஜெயிச்சிட்டோமில்ல” கமல்ஹாசனிடம் ஆசி வாங்கிய காங்கிரஸ் விஜய் வசந்த்….!!