செய்திகள் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் செல்போனை அடகு வைத்து மது அருந்திய தந்தை…மனமுடைந்த மகன்… விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish7 July 2024091 views திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் கோபி என்பவர் தனது மனைவி சொரக்காயலைம்மா, மகன் பாலு(19) ஆகியோருடன் வசித்து வருகிறார். கோபி அதே பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மகன் பாலு பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருக்கும் பொருட்களையும் அடகு வைத்து குடித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அதே போல் குடிக்க பணம் இல்லாததால் தனது மகனான பாலுவின் செல்போனை அடகு வைத்து மது அருந்தியுள்ளார். இதனை அறிந்த பாலு தந்தையை கண்டித்ததால் அவர் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மனமுடைந்த பாலு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் பாலுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.