செய்திகள் மாநில செய்திகள் அடுத்த 2 மாதங்களுக்கு… பருப்பு மற்றும் பாமாயிலுக்கான டெண்டர்… தமிழக அரசு அறிவிப்பு…!! Revathy Anish18 July 2024092 views தமிழகத்தில் பொது விநியோக திட்ட த்தில் கிடைக்கும் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விநியோகம் நிறுத்தப்பட போவதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் குறுகிய கால டெண்டர் விடுத்துள்ளது. இதற்கு தேவையான ஆவணங்களை வருகின்ற 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் டெண்டர் மூலம் விரைவில் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.