செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் பயணிகளிடம் வெளிநாட்டு கரன்சிகள்… சுங்கத்துறையினர் நடவடிக்கை… 2 பேர் கைது…!! Revathy Anish25 July 20240120 views திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் உடமைகளில் 10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா எண் மற்றும் யூரோகள் இருந்துள்ளது. இது குறித்து அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் காவல்துறை அந்த நபரை கைது செய்து வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்ல முயன்ற பெண் பயனியின் உடைமைகளை சோதனை செய்தபோது 8,000 அமெரிக்க டாலர்கள் ஒரு பார்சலுக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு 5 லட்சத்தி 63 ஆயிரம் ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணிடமும் முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.