ஜூலை 1ஆம் தேதி முதல்… நிறுத்தப்பட்ட திருச்சி-ராமேஸ்வரம் ரயில்… அதிகாரிகள் அறிவிப்பு…

திருச்சியில் இருந்து நாள்தோறும் காலை 7.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு மதியம் 12.25 க்கு ராமேஸ்வரம் சென்று அடையும். இந்த ரயில் குமாரமங்கலம், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி,ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும். இந்நிலையில் மானாமதுரை ரயில் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் திருச்சி-ராமேஷ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 1 முதல் 31 வரை மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை மட்டும் இயங்கும் என திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு இயங்கும் ரயிலும் இன்று முதல் மானாமதுரையில் இருந்து இயக்கப்பட உள்ளது.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!