ஆகஸ்ட் 1 முதல் 5 வரை… சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி… கட்டுப்பாடுகள் விதித்த வனத்துறை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக்கோவிலில் பவுர்ணமி, அம்மாவாசை, போன்ற விஷேச தினங்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆடி மாத அமாவாசை திருவிழா சதுரகிரி கோவிலில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். எனவே வருகின்ற 1ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலையில் இருப்பவர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது எனவும், 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சதுரகிரி மலைப்பகுதியில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்…! சிரமப்படாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரியாகும்…! கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்…!!