21-ஆம் தேதியில் இருந்து 31வரை… தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்… ரயில்வேத்துறை அறிவிப்பு…!!

சென்னை தாம்பரம் ரயில் பாதை மேம்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் 22ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை விழுப்புரம் வரை இயக்கப்படவுள்ளது. அதே போல் எழும்பூர்-திருச்சி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் 23-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1 வரை செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படவுள்ளது.

இதனையடுத்து எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் 23ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக சேலத்திற்கு சென்றடையும். இதைத்தொடர்ந்து நாகர்கோவில்-தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதய எக்ஸ்பிரஸ் வருகின்ற 22ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. ஹைதராபாத்-தாம்பரம்-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!