செய்திகள் மாநில செய்திகள் இனிமே இவர் தான் புதிய மாநில தலைவர்… பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு…!! Revathy Anish23 July 20240104 views பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கட்சியின் புதிய மாநில தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர். 2006-ஆம் ஆண்டிலிருந்து ஆம்ஸ்ட்ராங் உடன் இணைந்து கட்சியில் வேலை பார்த்து வந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் புதிய மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2009 மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னால் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது போடப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆனந்தன் ஆஜராகி வாதிட்டு ஆம்ஸ்ட்ராங்கை விடுத்துள்ளார்.