தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரி… கையும் களவுமாக பிடித்த போலீசார்… 110 லிட்டர் சாராயம் பறிமுதல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் யாருக்கும் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்ய சென்ற போது அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆறுமுகத்தை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் கேரளா அலங்குளத்தில் இருப்பது தெரியவந்த நிலையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பதுங்கி இருந்த ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கச்சிராயபாளையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரை கைது செய்த போலீசார் அவர் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் கள்ளசாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!