கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் முழு கொள்ளளவை நெருக்கும் அணைகள்… பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish19 July 2024080 views தொடர்ந்து பெய்து வரும் மேற்குதொடர்ச்சி மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை நிரம்பி வருகிறது. 120 அடி கொண்ட ஆழியாறு அணையில் இன்று காலை நிலவரப்படி 106 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளின் முக்கிய யானையான சோலையாறு அணையும் நிரம்பி வருகிறது. 165 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 161 அடியாக உள்ளது. ஆணை நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படும் என தெரிவித்துள்ளனர்.