செய்திகள் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர் சிலை… மீண்டும் கோவிலுக்கே வந்ததால் நெகிழ்ச்சி…!! Revathy Anish7 July 2024083 views திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அவலூர் சாலையில் உள்ள குளம் அருகே வழித்துணை விநாயகர் கோவில் இருக்கின்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு திருடப்பட்ட விநாயகர் சிலை நேற்று மீண்டும் கோயிலுக்குள்ளேயே இருந்துள்ளது. திருடியவர்களே மீண்டும் கொண்டு வந்து வைத்திருக்கலாம் என ஊர் மக்கள் தெரிவித்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்த வழிபட்டு சென்றனர். மேலும் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று கோவிலில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.