சுற்றுலா தளங்களில் கஞ்சா… 3 தாங்கும் விடுதிகளுக்கு சீல்… கொடைக்கானலில் பரபரப்பு…!!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் போதை பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், காவல்துறையினர் சுற்றுலாத் துறையினர், கோட்டாட்சியர் சிவராம், நகராட்சி ஆணையளர் சத்தியநாதன் ஆகியோர் கொடைக்கானல் உள்ள தனியார் விடுதிகளுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியார் விடுதிகளில் நடத்திய சோதனையில் ஏராளமான மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் 3 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கிருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் மது பாட்டில்களாகியவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து போதை பொருட்களை பயன்படுத்திய சுற்றுலா பயணிகள், விடுதி உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 24 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!