சிக்கிய கஞ்சா, போதை மாத்திரைகள்… 6 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோவை மாவட்டம் ஏ.ஜி.புதூர் அருகே உள்ள குறும்பபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தபித்யாதார் குர்லா, சுசில்தீப் மற்றும் 15 வயது சிறுவர்கள் இரண்டு பேர் என தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் 3 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்த நிலையில், அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதேபோல் நவஇந்தியா பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஜெய்ஹிந்த், விபீஷணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!