செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் சிறுமிக்கு பாலியல் தொல்லை… தலைமறைவான நபர்… போலீஸ் வலைவீச்சு…!! Revathy Anish23 July 20240107 views விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்ற உடனடியாக ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பகத்சிங் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே பகத்சிங் தலைமறைவான நிலையில் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.