செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் சிப்ஸ்க்கு பணம் கொடுங்க… மதுபோதையில் வாலிபர் செய்த அட்டகாசம்… கைது செய்த போலீஸ்…!! Revathy Anish23 July 20240109 views சென்னை பெரம்பூர் தணிகாசலம் தெருவில் சிவகுமார் என்பவர் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் கடையில் இருந்து சிப்ஸ், பப்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அதற்கு பணம் தராமல் அங்கிருந்து சென்றுள்ளார். இதனை பார்த்து சிவகுமார் உடனடியாக அவரைப் பிடித்து வாங்கிய பொருட்களுக்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சிவகுமாரை மிரட்டி அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரியின் அடிப்படையில் திரு.வி.க நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மதுபோதையில் வந்த வாலிபர் அதே பகுதியில் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பது தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்தனர்.