பெல்ட்டில் இருந்த தங்கம்… கடத்திய நபர் கைது… 1.50 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்…!!

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ஷேக் மகபூப் பீர் என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரது இடுப்பில் துணி பெல்ட் அணிந்திருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது பெல்டை பிரித்து பார்த்தபோது 2 கிலோ 400 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 57 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!