சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மின்னணு மற்றும் மின் வாகனங்களின் உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருவதால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய நகரமாக ஓசூர் உள்ளது. எனவே அப்பகுதியில் பல நவீன தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் ஓசூரில் 2,000 ஏக்கரில் ஒரு பன்னாட்டு விமான நிலையம் விரைவில் அமைக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டிற்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இருக்கும். இந்த விமான நிலையம் அமைவதால் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியில் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.