Home செய்திகள் என்.ஐ.டி.யில் சீட் கிடைச்சிருச்சு… முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமை… முதலமைச்சருக்கு நன்றி…!!

என்.ஐ.டி.யில் சீட் கிடைச்சிருச்சு… முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமை… முதலமைச்சருக்கு நன்றி…!!

by Revathy Anish
0 comment

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணி மற்றும் சுகன்யா 2024-ஆம் ஆண்டு JEE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ரோகிணி 73.8% மதிப்பெண் பெற்று தமிழகத்தில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பெற்றுள்ளார். இதனால் ரோகிணி மற்றும் சுகன்யா திருச்சி என்.ஐ.டி.யில்(NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ரோகிணி வேதி பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்க உள்ளனர். இதுகுறித்து ரோகிணி கூறுகையில் எனக்கு உதவிய பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். கல்லூரியில் படிப்பதற்கான அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசு செலுத்த முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.