பட்டதாரி பெண் கர்ப்பம்… கிராம மக்கள் சீர் வரிசை… நெகிழ்ச்சி அடைய வைக்கும் சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் 12-ஆம் வகுப்பு முடித்து அப்பகுதி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்து வந்துள்ளார். சங்கீதாவின் பெற்றோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் அவர் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சங்கீதா திருமண வயதை அடைந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சங்கீதாவிற்கு கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.

இதனையடுத்து சங்கீதா தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம் இளநிலை பட்டம் பயின்று வந்துள்ளார். தற்போது சங்கீதா கர்ப்பமாக இருப்பதை அறிந்த காட்டுக்கூடலூர் மக்கள் தாய் வீட்டு சார்பில் முன்னின்று அவருக்கு வளைகாப்பு நடத்தி, 5 வகையான சாதங்கள், பழங்கள், சீர் வரிசைகள் என அனைத்தையும் வெகு விமர்சையாக கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!