செய்திகள் மாநில செய்திகள் பெருந்தலைவரின் பிறந்தநாள்… அவரது லட்சியங்களை நிறைவேற்றுவோம்… பிரதமர் மோடி புகழாரம்…!! Revathy Anish16 July 20240101 views படிக்காத மேதை, கர்மவீரர், பெருந்தலைவர் என்று நம் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காமராஜர் அவர்கள் ஏழைகளை மேம்படுத்துவதற்காக அவரின் தொலைநோக்கு முயற்சிகள் அனைத்தும் மதிக்கத்தக்க வகையில் உள்ளது. மேலும் அவர் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என கல்விக்கான அவரின் பங்களிப்பு ஈடு இணையற்றது. இந்நிலையில் அவரது லட்சியங்களை நிறைவேற்றவும், சமூக நீதி மற்றும் கருணையும் கொண்டு சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதிபாட்டை நாங்கள் வலியுறுத்துகிறோம் என பிதாமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.