49
குஜராத் மாநிலத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தீவிர சோதனையில் துவாரகாவில் 59 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 போதைப் பொருள் பாக்கெட்டுகளும் காட்ச் கடற்கரை பகுதியில் 61 கோடி ரூபாய் மதிப்புள்ள 60 போதைப் பொருள் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோன்று போர்பந்தரிலும் போதை பொருள் பாக்கெட்டுகள் சிக்கியுள்ளது. அதன்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 200 போதை பொருள் பாக்கெட்டுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.