தொல்லை கொடுத்த நூலக ஆசிரியர்… பெற்றோர்கள் செய்த செயல்… போக்சோவில் உடனடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் டெல்லி பப்ளிக் தனியார் பள்ளியில் நூலக பொறுப்பு ஆசிரியராக பால்ராஜ்(30) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் நூலகத்திற்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் குழந்தை நல அதிகாரிகளுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் பால்ராஜ் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனையடுத்து அவரை பணிநீக்கம் செய்துள்ளனர். மேலும் ஆர்.எஸ்.புறம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!