செய்திகள் தேனி மாவட்ட செய்திகள் 2 நாட்களில் உயர்ந்த நீர்மட்டம்… 87 மெகாவாட் மின் உற்பத்தி… சாரல்மழையால் மக்கள் மகிழ்ச்சி…!! Revathy Anish26 June 20240105 views கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர் மட்டும் சிறுது சிறிதாக உயர்ந்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் முல்லை பெரியாறு அணை பகுதியில் சாரல் மழை மட்டும் பெய்ததால் அணையின் நீர்மட்டம் உயராமல் அப்படியே இருந்தது. இந்நிலையியல் கடந்த வாரம் முதல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி அணையின் நீர்வரத்து 2001 அடியாக இருந்த நிலையில் இன்று 3579 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 117 அடியாக இருந்த நிலையில் கடந்த 2 தினங்களில் 119.90 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து 967 கன அடி நீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் நிலையம் மொத்தம் 87 மெகாவாட் மின் உற்பத்தி செய்தது குறிப்பிடத்தக்கது.