ஹிந்தி சினிமாவின் நடிகையாகவும், பிக் பாஸ்நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல மடைந்தவர் ஹினா கான். இவர் சமீபத்தில் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், நான் விரைவில் மீண்டு வருவேன் எனவும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையறிந்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக இருந்த நிலையில் ஹினா கான் தனது ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகை சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹினா கான் ஒரு போராளி எனவும், புற்றுநோய் பாதிப்பில் இருந்து கூடிய விரைவில் நலம்பெற நான் பிராத்திக்கின்றேன் எனவும் கூறியுள்ளார். இந்த பதிவிற்கு ஹினா கான் உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு வருவதாகவும், உங்கள் அன்புக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.