செய்திகள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள் வீட்டிலேயே விபசார விடுதி… வசமாக சிக்கிய முதியவர்… 3 பெண்கள் மீட்பு…!! Revathy Anish12 July 20240104 views தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஸ்டேப்ளி தெருவில் வசித்து வரும் ராஜன்(68) என்பவர் பெண்களை வைத்து வீட்டிலேயே விபசாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த இசக்கித்துரை என்பவரிடம் தான் விபசாரம் செய்வதாகவும், பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இசக்கித்துரை உடனடியாக நாசரேத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜன் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 3 பெண்களை மீட்டு ராஜனையும் கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.