ஒரு கிலோ தக்காளி இவ்வளவா…? மழையால் ஏற்பட்ட தட்டுப்பாடு… வாடிக்கையாளர்கள் வேதனை…!!

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தக்காளிகள் அதிகளவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வட மாநில வியாபாரிகள் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாயில் இருந்து 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் பயன்படுத்தும் தக்காளியின் விலையேற்றத்தால் வாடிக்கையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!