20 பேர் உடல்களை புதைத்து எப்படி…? மனநல காப்பகத்திற்கு சீல்… உரிமையாளர் உள்பட 10 பேரிடம் தீவிர விசாரணை…!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குந்தலாடி பெக்கி பகுதியில் சுமார் 24 ஆண்டுகளாக மனநல காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை டாக்டர் அகஸ்டின் என்பவர் நடந்து வந்தார். இந்நிலையில் இந்த காப்பகத்தில் இருக்கும் பலர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அருணா அங்கு சென்று சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மனநல மருத்துவர் விவேக் உள்பட அதிகாரிகள் பலரும் அந்த காப்பகத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் அந்த காப்பகம் முறையாக அனுமதி பெறாமல், அடிப்படை வசதியின்றி, காப்பகத்தில் இருப்பவர்களில் பெயர் ஊர் போன்ற எந்த பதிவுகளும் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து அந்த காப்பகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் அங்கிருந்த 13 பேரை மருத்துவர்கள் மீட்டு கோவை மனநல காப்பகத்தில் அனுமதித்து முறையான சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அந்த காப்பகத்தில் 60 பேர் இருந்ததாக தகவல்கள் கிடைத்த நிலையில் தற்போது 13 பேர் மட்டுமே உள்ளனர்.

மேலும் காப்பகத்தில் இருந்த 20 பேர் அங்குள்ள வளாகத்திலேயே புதைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த நிலையில் புதைக்கப்பட்டனர் என்று விசாரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் காப்பகத்தில் உரிமையாளர் அகஸ்டின், அவரது மனைவி கிரேசி, காப்பக ஊழியர்கள் என 10 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!