கணவன் கொடூர கொலை… மனைவி உள்பட 2 பேர் கைது… தஞ்சை அருகே பரபரப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அடுத்துள்ள சாத்தனூர் பகுதியில் மாரிமுத்து(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்துவேறுபாடு காணரமாக முதல் மனைவியை பிரிந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த பிரியா(21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி மாரிமுத்து, பிரியா மற்றும் மாரிமுத்துவின் முதல் மனைவியின் சகோதரரான மணிகண்டன் ஆகியோர் மாரிமுத்து வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரியா மற்றும் மணிகண்டன் இருவரும் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மாரிமுத்துவை வெட்டி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மாரிமுத்து உடலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் புதைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து மாரிமுத்து தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய பிரியா, மணிகண்டனை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!