கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் கணவன் குடிப்பதால் உயிரை மாய்த்து கொண்ட மனைவி… கோவை அருகே சோகம்…!! Revathy Anish22 July 20240108 views கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ.கவுண்டம்பாளையம் பகுதியில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி(27) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். ராஜேஷ் குமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் புவனேஸ்வரி தன் மகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோரும் புவனேஸ்வரியை சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழுமாறு அனுப்பி வைத்தனர். ஆனாலும் ராஜேஷ்குமார் மது பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து புவனேஸ்வரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.